கடந்த ஆண்டு கல்லூரியிலிருந்து கல்விச்சுற்றுலா சென்றிருந்த தம்பி புருனோ என்னாரெசு எடுத்த நிழற்படம்!
இயற்கையாய் இரு கண்கள்! மூன்றாவதாக அறிவுக்கண்! கலைக்கண் நாலாவது... எப்பவுமே கையிலிருக்கும் அய்ந்தாம் கண்-கேமரா! (அடப்பாவி! நெஜம்மா நாலு கண்ணுக்கு அதான் அர்த்தமா?)
Thursday, August 23, 2007
Monday, August 13, 2007
சக்கரங்கள் சுமக்கும் சக்கரங்கள்!
மதியம் 1 மணிக்கு பச்சையப்பன் கல்லூரிக்கு பக்கவாட்டில் நுங்கம்பாக்கம் செல்லும் சாலையில் கண்டது இந்தக்காட்சி! என் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன். சரியாக எடுக்க முடியவில்லை. பின்னர் அந்த வண்டி, தானாக ஒரு இடத்தில் நின்றது. படத்தை எடுத்துவிட்டு, எங்கே நின்றது என்று பார்த்தேன். பெரியவர் வண்டியை நிற்த்திவிட்டு, நேராக 'டாஸ்மாக்' கடையை நோக்கி நடந்தார்.
Wednesday, August 8, 2007
வெல்வெட் இலைகள்
எங்கள் கல்லூரியின் வாசலில் இருக்கும் மரத்தின் பின்னால் மாலை நேரங்களில் வீசும் ஒளியால் ஒளிரும் இலைகளும், கொஞ்சம் தொலைவில் தெரியும் அடர்ந்த மரங்களின் அடர் பச்சையும் எப்பொதுமே எனக்கு மயக்கத்தைத் தருபவை... ஏதோ வெல்வெட் இலைகளைப் போல...உங்களுக்குத் தோன்றுகிறதா? பாருங்கள்!
இல்லையென்றால் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்களேன். கேட்கிறோம்.
Subscribe to:
Comments (Atom)
