Monday, September 10, 2007

இருளை விலக்கும் வண்ணங்கள்!

hold on! hold on!
நானும் வந்துட்டேன் போட்டிக்கு!
தமிழில் புகைப்படக்கலை நடத்தும் போட்டிகளில் முதல் முறையாக செப்டம்பர் மாத போட்டியில் கலந்துகொள்கிறேன்.
(புதுமுக நாயகனுக்கு பரிசு எதுவும் உண்டாப்பா!)

அய்யா, அண்ணா, அக்காமார்கள், மகள் என அய்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படம். (2/9/2007)

(ஆறுதலுக்கு: போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே எண்ணம் மட்டுமே!)

Thursday, August 23, 2007

வாழ்க்கைச் 'சக்கரம்'!

கடந்த ஆண்டு கல்லூரியிலிருந்து கல்விச்சுற்றுலா சென்றிருந்த தம்பி புருனோ என்னாரெசு எடுத்த நிழற்படம்!


சக்கரத்தின் மேல் வாழ்க்கை! சக்கரம் சுழன்றால் ....

Monday, August 13, 2007

சக்கரங்கள் சுமக்கும் சக்கரங்கள்!

இந்த சைக்கிளுக்கு(Cycle) எத்தனை வீல்(Wheel)?
மதியம் 1 மணிக்கு பச்சையப்பன் கல்லூரிக்கு பக்கவாட்டில் நுங்கம்பாக்கம் செல்லும் சாலையில் கண்டது இந்தக்காட்சி! என் வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுத்தேன். சரியாக எடுக்க முடியவில்லை. பின்னர் அந்த வண்டி, தானாக ஒரு இடத்தில் நின்றது. படத்தை எடுத்துவிட்டு, எங்கே நின்றது என்று பார்த்தேன். பெரியவர் வண்டியை நிற்த்திவிட்டு, நேராக 'டாஸ்மாக்' கடையை நோக்கி நடந்தார்.

Wednesday, August 8, 2007

வெல்வெட் இலைகள்

எங்கள் கல்லூரியின் வாசலில் இருக்கும் மரத்தின் பின்னால் மாலை நேரங்களில் வீசும் ஒளியால் ஒளிரும் இலைகளும், கொஞ்சம் தொலைவில் தெரியும் அடர்ந்த மரங்களின் அடர் பச்சையும் எப்பொதுமே எனக்கு மயக்கத்தைத் தருபவை... ஏதோ வெல்வெட் இலைகளைப் போல...

உங்களுக்குத் தோன்றுகிறதா? பாருங்கள்!
இல்லையென்றால் எப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுங்களேன். கேட்கிறோம்.

Tuesday, July 24, 2007

தினமலரே திருந்து! திருந்து!

டிரையிலர் போட்டதுக்கு அப்புறம் படம் காட்டாமலே இருந்தா எப்படி?

அதான் வந்துட்டமுல்ல...

சரி.. சூடா போய்க்கிட்டிருக்கிற தினமலர் மேட்டர்-ல இருந்தே போடுவோம்.

அண்மையில் பார்த்த ஒரு சுவரொட்டி!

இடம்: பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை

படம் எடுத்தது: புதிதாக வாங்கியிருக்கும் 'SONY ERICSSON K-750i'

Tuesday, July 3, 2007

டிரைலர்-3

இப்படி சில ஆர்வக்கோளாறு சமாச்சாரங்களும்....இப்படி வித்தியாசமான ஆங்கிள்களும் (?!?!!)


இப்படி சில சம்பிரதாய முயற்சிகளும்....


இந்த டிரைலர் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

டிரைலர்-2

இப்படி சில ஊர் சுற்றிக் குறிப்புகளும்...


இப்படி சில திடீர் திகில் நிகழ்வுகளும் ....(என்ன திகிலா... சிங் இண்டியன் உட்பட நார்த் இண்டியன்கள் 'டமில்' இண்டியனை தமிழ்நாட்டுக் கல்லூரியில கத்தியை வச்சு குத்தப்போனது... இதென்ன புதுசாங்குறீங்களா?)


இப்படி சில ஜாலி நினைவுகளும்

(டிரைலர் தொடரும்)

களத்தில்...

தனியாக ஒரு நிழற்படத் தளம் ஆரம்பிக்கலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போதே நம்ம ஓசை செல்லாவும், மத்தவங்களும் சடசடன்னு கிளம்பி வகுப்பெடுக்க வந்துட்டாங்க!

ஆகா! குதிடா களத்தில்.. இதுதான் சரியான நேரம்-னு நானும் இறங்கிட்டேன்.

வகுப்பெடுக்கிற அளவுக்கு இல்லைன்னாலும், ஒவ்வொரு படத்துக்குப் பின்னாடியும் சில சுவாரசியமான நிகழ்வுகள் இருக்கு! அதையும் சேர்ந்தே பகிர்ந்துக்குறேன்.
கையில கேமராவைக் குடுத்து எடுத்துப் பழகுன்னு சின்ன வயசில சொன்னதோட மட்டும்மில்லாம, பிறகு கையில வச்சுக்கன்னு ஒரு புது கேமராவை வாங்கியும் குடுத்து அனுப்பிச்ச எங்க அய்யா சமா அவர்களுக்கு நன்றியோடு...ஆரம்பிக்கும் முன்னாடி ஒரு சின்ன டிரைலர்! எல்லாமே இருக்குங்குற மாதிரி....

இப்படி சில அழகா அமைந்ததும் உண்டு...

இப்படி நம்ம சுகுணாதிவாகர் ஸ்டைல்-ல சிலதும் உண்டு...

(டிரைலர் தொடரும்...)