கடந்த ஆண்டு தானியில் போய்க் கொண்டிருந்தபோது எடுத்த படம். சென்னை சென்ட்ரல் எதிரில் உள்ள மேம்பாலத்தில் முன்னாள் மத்திய சிறைச்சாலையைக் கடந்ததும் அமைந்திருக்கும் கல்லறைத் தோட்டத்தின் மத்தியில் இருக்கும் சிலை. பின்னால் இருப்பது பறக்கும் ரயில் பறக்கத் தொடங்கும் இடம்.. அதாவது பூங்காவிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பாலம் ஏறும் இடம்! நான் கல்லூரியில் படிக்கும் போது தினந்தோறும் இவ்விடத்தைக் கடக்கும் போதெல்லாம் இயேசு தற்கொலை செய்ய முயற்சிப்பதைப் போலவே தோன்றும். (இரவு நேரத்தில் அந்தரத்தில் மிதப்பது போன்றிருக்கும் இதன் ஒளியமைப்பு.) இதைத் தோழர் செந்தமிழ் சேகுவேராவிடம் சொல்லியபடி படம் எடுத்தபோது (2009- மே) அவர் அடித்த கமெண்ட் கீழே!
கர்த்தரே!தற்கொலைக்குமுயற்சி செய்யாதேயும்!உம்மைக்காக்கமனிதர்கள் இருக்கிறார்கள்!
இன்னும் நல்ல கமெண்ட் இருந்தால் அனுப்புங்களேன்..
சிறந்த கமெண்டுக்கு பரிசாக...
.
.
.
.
பாவங்களை மன்னிக்கும் இயேசுவின் ரத்தம் ரெண்டு லிட்டரும்,
புனித ஆவி ஒரு சாஷே பாக்கெட்டும் அனுப்பி வைக்கப்ப்படும்.
2 comments:
டைடானிக் பட நாயகன் போல நிக்கிரவற வர போய் கலாய்கிறிங்க
கூட மேக்தலீன் இல்லையே ரசிகா!
Post a Comment